வரைபடம் என்ற பெயரில் மீண்டும் சீண்டிப் பார்க்கும் சீனா

வரைபடம் என்ற பெயரில் மீண்டும் சீண்டிப் பார்க்கும் சீனா

Share it if you like it

இந்தியாவில் வலுவான மத்திய அரசு இல்லாத காரணம். பலவீனமான வெளியுறவு கொள்கை உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் மற்றும் இந்திய ராணுவத்திடம் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுதங்கள் இல்லாத பலவீனங்களை அறிந்த சீனா 1962 ல் இந்தியாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு போர் தொடுத்து பல ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவை அபகரித்துக் கொண்டது. இன்றளவும் அதை தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது. அதன் பிறகும் இந்தியாவில் திறமான ஆட்சி இன்மை உள்நாட்டு குழப்பங்கள் ஆட்சியாளர்களின் பலவீனமான ராஜ்ஜிய உறவு காரணமான சர்வதேச அளவில் இந்தியா பலம் இழந்த காரணங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவ்வப்போது எல்லைப்புறங்களில் ஊடுருவுவதும் ஊடுருவிய பகுதிகளை ஆக்கிரமித்து அவை யாவும் சீனாவிற்கு சொந்தம் என்று அத்துமீறுவதும் சீனாவிற்கு வழக்கமாக இருந்தது.

2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகள் மட்டும் ஆண்டிற்கு இரண்டு மூன்று முறையாவது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்து மீறுவதும் பல பகுதிகளை ஆக்கிரமித்து ராணுவ நிலைகளை கட்டமைப்பது தொடங்கி இந்திய ராணுவ நிலைகளை அப்புறப்படுத்த வலியுறுத்துவது எல்லைப்புற கட்டுமானங்களை தடுத்து நிறுத்துவது என்று பல்வேறு அட்டூழியங்களை தொடர்ந்தது. அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியா சார்பில் யார் பயணம் செய்தாலும் அதற்கு சீனாவின் அனுமதி வேண்டும் என்று உச்சகட்ட அராஜகத்தில் இறங்கியது. வெறும் வார்த்தையோடு நில்லாமல் அருணாச்சலம் மாநிலம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்களில் உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய சீன வரைபடத்தை வெளியிடுவதும் அவை யாவும் சீனாவின் பகுதிகள் என்று அறிவிப்பது . அதன் மூலம் அந்த பகுதிகளுக்குள் இந்திய அரசு சார்பில் யாரேனும் நுழைய முற்பட்டால் சீனாவின் குடி புகல் நடைமுறையும் விசா அனுமதியும் தேவை என்று எல்லை மீறியது.

இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து களம் காண இந்திய ராணுவம் தயாராக இருந்த போதிலும் கடந்த கால ஆட்சியாளர்கள் பலவீனம் . முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்கள் சீன விசுவாசிகளாக இந்திய நலனுக்கு விரோதமாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தின் கைகள் கட்டப்பட்டது. சீனாவின் ஊடுருவல்களும் அத்துமீறலும் தொடர்கதையானது. ஆட்சியாளர்கள் கண்டன அறிக்கை வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு புறம் கண்துடைப்பு நாடகமாடி விட்டு மறுபுறம் சீனாவின் தாளத்திற்கெல்லாம் இவர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவு இந்திய எல்லைப் பகுதி பாதுகாப்பு பலவீனமானதும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளா னது.

ஆனால் 2014க்கு பிறகு சீனாவிற்கு அதன் போக்கிலேயே பதிலடி தரப்படுகிறது . குறிப்பாக சீனா அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் பட்சத்தில் தென் சில கடலில் இருக்கும் குறிப்பிட்ட தீவுகளை பிலிப்பைன்ஸ்க்கு தான் சொந்தம் என்ற பிலிப்பைன்ஸ்ன் தீர்மானத்தை இந்தியா முன்மொழியும். சீனா – பாகிஸ்தான் வழியான எகனாமிக்கல் காரிடோர் திட்டத்திற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சீனா கால் பதித்த போது அதற்கு பதிலடியாக நேபாளம் – பூடான் எல்லையில் இந்தியா சிவில் மற்றும் இராணுவ கட்டுமானங்களை கட்டி முடித்தது.

இதை எதிர்த்து சீனா அறிக்கை விட்டு சர்வதேச அளவில் பஞ்சாயத்து வைக்கும் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது பாகிஸ்தான் உடனான முரண்பாடு மட்டுமல்ல. சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளும் இந்திய நிலப்பரப்பிற்கு சொந்தமானதும் நிச்சயமாக மீட்கப்படும் என்ற குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும். அதோடு சீனா பின் வாங்கி போகும்.

ஒருபுறம் சீனாவின் ஆதரவு கொடுக்கும் தைரியத்தில் எல்லையில் வாலாட்டி வந்த பாகிஸ்தான் பல மடங்கு பதிலடி தரப்பட்டு பெட்டி பாம்பாக அடக்கி வைக்கப்பட்டது. மறுபுறம் எல்லையில் தொடர்ச்சியான ஊடுருவல்கள் தீவிரவாத தாக்குதல்கள் நக்சல் என்று பல்வேறு நாசக்காரங்களுக்கு துணைபோன மியான்மர் – வங்கதேசம் என்று பல்வேறு எல்லைப்புறங்களிலும் எல்லையை கடந்து போய் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி பயங்கரவாத பயிற்சி முகாம் மற்றும் ஆயுத நிலைகளை அழித்தது. அவ்வகையில் பாகிஸ்தானின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது உச்சமாகி சீனாவின் அத்தனை அடியாள்களையும் இந்தியா வரிசை கட்டி அடிக்க தொடங்கியது.

சீனா கொடுக்கும் ஆதரவில் தைரியத்தில் இந்தியாவில் எல்லையில் ஊடுருவல் நாசவேலை என்று அட்டூழியம் செய்த நாடுகள் தாங்கள் இந்தியாவிடம் பதிலடி வாங்கிய போது சீனா மௌனம் காத்ததில் அரண்டு போனது. உலக நாடுகள் கண்டு கொள்ளாமல் போனதில் சீனாவின் பெரியண்ணன் மனோபாவம் தகர்ந்தது. அதற்கு இரண்டாம் கட்ட அடியாள் வேலை பார்த்த அத்தனை எல்லை நாடுகளும் இனி இந்தியாவின் வம்பு நமக்கு வேண்டாம் என்று வாய் பொத்தி அமர்ந்து விட்டது. இனி அடியாட்களை நம்பி பலனில்லை என்று நேரடியாக களமிறங்கிய சீனா இராணுவம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த கால இந்தோ சீனா உடன்படிக்கையின் படி ஆயுதம் ஏதுமின்றி நிராயுதபாணிகளாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இந்திய ராணுவ நிலைகளின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியது.

சாதாரண வாக்குவாதமாக தொடங்கியது தாக்குதலாக மாறியதும் சுதாரிப்பு இல்லாத இந்திய ராணுவத்தின் உதவி கிடைக்கும் முன்னே ஏற்கனவே திட்டமிட்டபடி பெரும் தாக்குதலை சீன ராணுவம் அரங்கேற்றியது. இந்திய தரப்பில் 30 முதல் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேர்ந்தது. எனினும் கடந்த காலங்களைப் போல ராணுவத்தின் கைகள் கட்டப்படாமல் அவர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் கைகளில் ஆயுதம் ஏதுமின்றி கூட வெறும் கைகளாலேயே மல்யுத்தத்தில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினரை கொன்று குவித்தார்கள்.

கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு வெளிப்படையான அஞ்சலியும் அவர்களுக்கு உரிய நிவாரணம் இழப்பீடு கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடைமுறை என்று அத்தனையும் இந்திய அரசு வெளிப்படையாக செய்தது. ஆனால் இன்று வரை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் தாக்கியதில் இத்தனை வீரர்களை சீனா இழந்தது என்று வெளிப்படையாக ஒரு அறிவிப்பை கூட சீனா வெளியிட முடியவில்லை. இதன் காரணமாக உள்நாட்டு மக்களிடம் அதிருப்தி சீன ராணுவ அளவில் எதிர்ப்பு என்று பெரும் சிக்கலை சீனா எதிர்கொண்டது . இந்தோ சீனா எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கும் ரோந்து பணிகளுக்கும் போவதற்கு கூட சீன ராணுவத்தினர் தயார் இல்லை ராணுவத்தை விட்டு விலக தயார் என்ற அளவில் சீன ராணுவம் பின்னடைவை சந்தித்தது.

இதன் காரணமாக சில காலம் அடக்கி வாசித்த சீனா இந்தியாவில் புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்பு சந்திராயன் வெற்றி அடுத்து வரும் சூரிய ஆய்வு விண்கலம் கொரோனா பேரிடர் காலம் கடந்தும் உலகளவில் நிமிர்ந்து எழும் இந்திய பொருளாதாரம் என்று பல்வேறு விஷயங்கள் காரணமாக பெரும் பொறாமையும் துவேசமும் கொண்டு மீண்டும் ஏதேனும் ஒரு வகையில் இந்தியாவை சீண்டிப் பார்த்து அதை அவமதிக்க வேண்டும் அதன் மூலம் தன்னுடைய இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளலாம். தன் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று மீண்டும் வம்புக்கு வருகிறது.

முத்துமாலை திட்டம் என்ற பெயரில் இந்தியாவை முற்றுகையிடும் ராணுவ நிலைகளை ஒவ்வொன்றாக அறுத்தெறிந்த இந்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் புதிய உச்சத்தை நோக்கி நகரும் இந்திய ராணுவத்தின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் கடற்படையில் நவீனமாகி வரும் புதிய யுக்திகள் என்று இனி நேரடியான யுத்தத்தின் மூலம் இந்தியாவை எதிர் கொள்வதும் வெற்றி கொள்வதும் இயலாத காரியம். யுத்தம் என்று வந்தால் இந்தியாவை காட்டிலும் பெருத்த இழப்பும் அவமானமும் தனக்கு மட்டுமே வந்து சேரும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட சீனா கத்தியின்றி யுத்தம் இன்றி இந்தியாவின் தன்மானத்தை சீண்டிப் பார்த்து அதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் கால் பதிக்க முயன்று எப்படி இலங்கை தீவில் பாலரு பட்ட குரங்காக இன்று அம்பாந் தோட்டத் துறைமுகம் முதல் பாகிஸ்தானின் இக்வடார் கராச்சி வங்கதேச டாக்கா துறைமுகம் வரை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. தென்சீன கடல் முதல் அரபிக்கடல் வரை நிறுத்தப்பட்ட ஒவ்வொரு சீன ராணுவ நிலைகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் வரையில் எப்படி இந்திய ராணுவ நிலைகள் ஆங்காங்கே எதிர்த்து நிற்கிறதோ அதே வழியில் இந்த வரைபட விஷயத்திற்கும் இந்தியாவிடம் இருந்து விரைவில் சீனா பதிலடி பெறும்.

இதுவரையில் சீனாவிற்கு கிடைத்த பதிலடி வெளியுறவுத் துறை மட்டத்தில் அதிகாரிகள் வரையிலும் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பிலான கண்ணியமான எச்சரிக்கைகளும் நாகரீகமான ராஜ்ஜியம் முன்னெடுப்புகளாகவும் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் எந்தவித காரணமும் இன்றி ஒருபுறம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் பகுதிதான் என்று ஆமோதிக்கும் வகையில் வரைபடம் வெளியிடுவதும் மறுபுறம் வடகிழக்கு மாநிலங்களை அபகரிக்கும் சிக்கன் நெக் பகுதியில் ஊடுருவ எந்நேரமும் கங்கணம் கட்டும் சீன ராணுவத்தின் சதிக்கு துணை போகும் வகையில் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கும் வரைபடங்களை வெளியிடுவதும் என்று தொடர்ந்து பாரதத்தின் தன்மானத்தை சீண்டி பார்ப்பது சீனாவின் நயவஞ்சகத்திற்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம்.

ஆனால் பலுசிஸ்தான் தைவான் தீபெத் என்று பல்வேறு நாடுகளும் இந்திய தேசியக் கொடியை ஏந்தி எங்களின் விடுதலைக்கு சீன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்ட இந்தியா உதவ வேண்டும் என்று வெளிப்படையாக வெளிநாடுகள் கோரிக்கை விடுக்கும் அளவில் வளர்ந்து நிற்கும் பாரதத்தின் தன்மானத்திற்கு சீனாவின் இந்த சில்லறைத்தனம் ஏற்புடையதும் அல்ல. இதை இந்திய அரசு இம்முறை சாதாரணமாக கடந்தும் போகாது.

சீன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் சீன செயலிகளுக்கு தடைகள் சீனாவின் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திக்கு கட்டுப்பாடு தடைகள் என்று இதுவரையில் சீனாவின் ஆட்டத்திற்கு கடிவாளம் இட்டு தற்காப்பு நடவடிக்கையில் மட்டுமே எடுத்தது. ஆனால் இம்முறை எப்படி கல்வான் பள்ளத்தாக்கில் பதிலடி கொடுத்ததோ? எப்படி சர்வதேச அரங்கில் ராஜ்ய அளவில் பதிலடி கொடுத்து வருகிறதோ ? அதே பாணியை கையில் எடுக்கும்

இன்று சீனா எந்த வடகிழக்கு மாநிலத்தை சீனப் பகுதி என்று வரைபடத்தை வெளியிட்டதோ? அதேபோல இந்திய வெளியுறவுத்துறை சார்பில் திபெத் மற்றும் இதர சீன எல்லை பகுதிகளை இணைக்கும் ஒரு புதிய இந்திய வரைபடத்தை வெளியிட எவ்வளவு நேரம் ஆகும் ? . அப்படி வெளியிடும் பட்சத்தில் சீனா பொங்கி எழுந்தால் அதற்கு இந்திய தரப்பில் கொடுக்கும் பதிலடி எப்படி இருக்கும்? சர்வதேச சமூகத்தில் இருந்து கிடைக்கும் பதிலடி என்னவாக இருக்கும் ? என்பதை சீனா யோசித்துப் பார்க்கட்டும்

கடந்த ஆண்டுகளில் இந்தியாவிற்கு சொந்தமான திருக்கைலாயம் – மானசசரோவம் உள்ளிட்ட பகுதிகளில் சில குறிப்பிட்ட கிலோமீட்டர்கள் ஊடுருவி சீனா வந்து சீனக் கொடியை ஏற்றி வைத்து அதை தங்களின் பகுதி என்று சொன்னதும், பதிலுக்கு இந்திய ராணுவம் சில கிலோமீட்டர்கள் சீனாவின் பகுதியில் ஊடுருவி போய் இந்திய கொடியை ஏற்றி வைத்து முகாமிட்டதும் பதறி அடித்து வந்த சீன வெளியுறவுத் துறைக்கு என் எல்லையில் இருந்து நீ வெளியேறினால் உன் எல்லையை விட்டு நானும் வெளியேறுவேன்.தவிர வேறு பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என்று கறார் காட்டியதும் வேறு வழியின்றி சீன ராணுவம் பின்வாங்கியதும் நினைவுக்கு வரலாம்.

அவ்வகையில் இந்திய ராணுவத்தை எப்படி வேண்டுமானாலும் தாக்கி அழிக்கலாம். இந்திய பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் ஊடுருவி முகாமிடலாம் என்று கடந்த காலங்களைப் போலவே நினைத்துக் கொண்டு இனியும் சீனா இந்திய விவகாரத்தில் அத்துமீருமானால் அது வாங்கும் பதிலடி இனி மீண்டு எழா வண்ணம் இருக்கும். அந்த வகையில் இந்தியாவிற்கு தேசத்தின் பாதுகாப்பு இறையாண்மை என்று வருமானால் பாகிஸ்தான் சீனா பங்களாதேஷ் என்று எல்லாமே ஒரே நிலைப்பாடு தான் . ஒரே கண்ணோட்டம் தான். அது பாகிஸ்தானிற்கும் பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் புரிந்து விட்டது. இனி எந்த காலமும் மறக்காத வண்ணம் ஒரு நல்ல பாடத்தின் மூலம் சீனாவும் விரைவில் கற்றுக் கொள்ளும்.

சீனா கொரோனா நோய் பரவல் மூலம் இந்தியாவில் பேரிழப்பு ஏற்படும். தடுப்பு மருந்து மூலம் இந்தியாவை அடிபணிய வைக்கலாம். அதே தடுப்பு மருந்து மூலம் உலகையும் தன் வசமாக்கலாம் என்று கனவில் இருந்தது. ஆனால் இந்தியா கொரோனா தடுப்பு மருந்து மூலம் தேசத்தையும் பாதுகாத்தது. குறைந்த விலை மருந்து விலையில்லா மருந்து உலகையும் பாதுகாத்தது. சீனாவின் சதியை உலக அரங்கில் அம்பலப்படுத்தி தனது நல்லெண்ண நடவடிக்கை மூலம் உலகையும் தன் பக்கம் நிறுத்தி கொண்டது. கொரோனா முடக்கம் கடந்தும் உலகின் பெரும் பொருளாதார வல்லரசாக மாறி வருகிறது. இதை எல்லாம் ஜீரணிக்க முடியாத சீனா இங்குள்ள அதன் விசுவாசிகளை நம்பி மீண்டும் பாரதத்தை சீண்டிப் பார்க்கிறது. அதை வைத்து அரசியல் செய்ய இங்கு ஒரு தேசவிரோத அரசியல் கும்பல் காத்திருக்கிறது. ஆனால் இம்முறை பாரதம் தற்காப்பு நடவடிக்கை மட்டும் எடுக்காது. சீனாவும் அதன் உளவாளிகளாக இங்கு நடமாடும் தேச விரோத அரசியல் முகங்களும் எக்காலத்திலும் மறக்காத ஒரு பாடத்தை நிச்சயம் பாரதம் சீனாவிற்கு பதிலடியாக தரும். அந்த நொடி முதல் சீனாவின் வெளிப்படையான சரிவு ஆரம்பம் ஆகும்.


Share it if you like it