டெல்லியில் காற்று மாசு அதிகளவில் இருப்பதாக உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தற்பொழுது தெரியவந்துள்ளது. மனிதர்கள் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றின் நிர்ணயிக்கப்பட்ட அளவு டெல்லியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காற்றின் சுத்தமான அளவு 50-க்குள் இருந்தால் நல்ல காற்று என்றும் 51-100க்குள் இருந்தால் திருப்தி என்றும், 101-200 இருந்தால் மிதமானது என்றும், 201-300 இருந்தால் மோசமானது என்றும் 301-400 இருந்தால் மிக மோசமானது என்றும், 401-500 இருந்தால் மிக மிக மோசமானது என்றும் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், டெல்லியில் நேற்று பகல் 3 மணி அளவில் 401 என்ற அளவை எட்டியது. மிக மிக மோசமான நிலையை டெல்லி மக்கள் சந்தித்து வருவதால், காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், வீடுகள் மற்றும் சர்ச்களில் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என்பதால், அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதும். கிறிஸ்துமஸ் காலங்களில் வீடுகளை அலங்கரிக்க மரங்கள் வெட்டப்படுவது தவிற்க்கப்பட வேண்டும் என்பதும். இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கயாக உள்ளது. இது குறித்து மத்திய அரசின் காற்று தர கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.