பெட்ரோல், டீசல், விலையை கூட சமாளித்து விடுவோம், “ப்ரீ பஸ்” விட்டதால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது, திமுக அரசு மீது ஆட்டோ டிரைவர்கள் கொதிப்பு..!

பெட்ரோல், டீசல், விலையை கூட சமாளித்து விடுவோம், “ப்ரீ பஸ்” விட்டதால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது, திமுக அரசு மீது ஆட்டோ டிரைவர்கள் கொதிப்பு..!

Share it if you like it

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே சட்டம், ஒழுங்கு, மோசமாகி கொண்டே செல்வது. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், கொரோனா தாக்கம் காரணமாக ஏழை, எளிய, மக்களின் வாழ்வாதாரத்தில் விழுந்த மிகப் பெரிய அடி என தமிழக மக்கள் கடும் இன்னல்களையும், அவதியையும் அடைந்து வருவது ஒருபுறம் என்றால்.

கோவை மாவட்ட அன்னூர் விவசாய பெருமக்கள் விரும்பாத திட்டங்களையும், சட்டங்களையும், நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தீவிர முயற்சி செய்வது, என மக்கள் வெறுக்கும் அரசாக தற்பொழுது உள்ள ஆளும் கட்சி மாறியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் ’ப்ரீ பஸ்’ விட்டதால், எங்கள் வாழ்கையே பெரும் கேள்விக்குறியாக மாறி விட்டது.  இன்னும் 5 வருடம் இதே நிலை தொடர்ந்தால் மோட்டார் வாகனத்தை நம்பி வாழும் லட்ச கணக்கான தொழிலாளர்களின் நிலைமை மோசமாகி விடும் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தி.மு.க அரசு செய்த தவறையும், தனது வேதனையும், சுட்டிக்காட்டி பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it