சிறுவர்களை ஆட்டோவில் சர்ச்சுக்கு அழைத்துச் சென்று மதமாற்றம் செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹிந்துக்கள் கூடி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் விடுமுறையில் இருக்கும் ஹிந்து சிறுவர்களை, கிறிஸ்தவ மிஷனரி கும்பல் சர்ச்சுக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ பாடல்களை சொல்லிக் கொடுத்து மத மாற்றம் செய்வதாக, பல்வேறு வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன. இந்த சூழலில், நேற்று முதல் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹிந்து சிறுவர்களை பிடித்து, ஆட்டோவில் ஏற்றி சர்ச்சுக்கு அழைத்துச் சென்றபோது, ஹிந்துக்கள் தடுத்து நிறுத்திய சம்பவ காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து சிறுவர்களை அழைத்துச் சென்ற பெண்ணிடம் ஹிந்து பெற்றோர்கள் கேட்டதற்கு, விடுமுறையில் வீட்டில் சும்மா இருக்கும் சிறுவர்களை அழைத்துச் சென்று நல்லொழுக்கத்தை கற்றுத் தருவதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறியிருக்கிறார். அதற்கு, நல்லொழுக்கத்தைக் கற்றுத்தர சர்ச்சுக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டுமா, இங்கேயே நாங்கள் மைதானம் ஏற்பாடு செய்து தருகிறோம். இங்கு வந்து விளையாட்டு மற்றும் நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுங்கள் என்று ஹிந்து பெற்றோர் கூறுகிறார்கள். ஆனால், அப்பெண்ணோ வாய்ப்பிருந்தால் வருகிறோம் என்று சொல்லி நழுவினார்.
இதையடுத்து, இனி ஹிந்து சிறுவர்களை சர்ச்சுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்கிற உறுதிமொழியை பெற்றுக் கொண்டு அப்பெண்ணை, ஹிந்து பெற்றோர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுகுறித்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.