‘தூள்’ வில்லி சொர்ணாக்காவாக மாறிய சுந்தரவள்ளி: போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிக்கொள்ள முயற்சி?!

‘தூள்’ வில்லி சொர்ணாக்காவாக மாறிய சுந்தரவள்ளி: போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிக்கொள்ள முயற்சி?!

Share it if you like it

தூள் திரைப்படத்தில் வரும் வில்லி சொர்ணாக்கா போல, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவள்ளி, போலீஸ் மீது இரு சக்கர வாகனத்தை ஏற்றிக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவை தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், போரூரில் போலீஸாரும், போக்குவரத்து போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, திராவிடர் கழக ஆதரவாளரான சுந்தரவள்ளி தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்.

சுந்தரவள்ளியும் ஹெல்மெட் அணியவில்லை, அவரது மகனும் ஹெல்மெட் அணியவில்லை. இதைக்கண்ட போலீஸார், சுந்தரவள்ளியின் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால், சுந்தரவள்ளியின் மகன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கிறார். இதனால், போலீஸார் கூச்சலிடவே, வாகனத்தை திருப்பிக் கொண்டு வந்தவர், போலீஸ்காரர் கால் மீது இரு சக்கர வாகனத்தை ஏற்றி இருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த போலீஸ்காரர், அவரை அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

உடனே, தூள் திரைப்படத்தில் வரும் வில்லி சொர்ணாக்காவாக மாறிய சுந்தரவள்ளி, போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அச்சில் ஏற்ற முடியாத சில வார்த்தைகளையும் சுந்தரவள்ளி பிரயோகம் செய்தார். மேலும், தான் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி என்னை எப்படி நிறுத்தலாம் என்று சொல்லி போலீஸாரை மிரட்டினார். இதனால், அச்சமடைந்த போலீஸாரும் அபராதம் விதிக்காமல் சுந்தரவள்ளியை அனுப்பி வைத்து விட்டனர்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் சுந்தரவள்ளியின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். அதேபோல, அபராதம் விதிக்காமல் விட்ட போலீஸாரையும் வசைபாடி வருகின்றனர். சாதாரண பொதுமக்களை மிரட்டி உருட்டி அபராதம் விதிக்கும் போலீஸார், அரசியல்வாதி என்று மிரட்டியதோடு, தகாத வார்த்தைகளால் பேசிய சுந்தரவள்ளிக்கு அபாராதம் விதிக்காததை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it