பா.ஜ.க. மூத்த தலைவர் கே.ஜே. அல்போன்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
முஸ்லீம் லீக் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இவரின், கருத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ஜே. அல்போன்ஸ் பிரபல ஊடகமான ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
“இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான கட்சி. அது இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ உரிய கட்சி இல்லை. அது என்றும் இருக்கப்போவதுமில்லை. தீவிரவாதம், அடிப்படைவாதம் என்று அக்கட்சி முற்றிலும் மௌனமாகிவிட்டது. கேரளா ஐஎஸ்ஐஎஸ்-க்கான ஆய்வகமாக மாறிவிட்டது. இவர்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு புரிந்து கொள்ளும் திறன் இல்லை. அது பரவாயில்லை, சிலருக்கு அறிவுத்திறன் இல்லை. ஆனால், குறைந்த பட்சம் மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், விஷயங்களைப் படியுங்கள்” என்று கூறியுள்ளார்.