காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே-10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள், மே-13 தேதி வெளியிடப்பட்டன. இதில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற சர்ச்சை வெடித்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தனர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் இருப்பார்கள் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழல் நிலையில், டி.கே. சிவகுமார் பிரபல ஊடகமான இந்தியா டுடே-விற்கு அளித்த பேட்டிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த, பேட்டியில் அவர் கூறியதாவது :
நிருபர் ; கேமராவை பார்த்து சொல்லுங்க.. கர்நாடக மாநிலத்தில் அடுத்த 5 வருடங்களுக்கு காங்கிரஸ் ஆட்சி இருக்க நீங்கள் உறுதுணையாக இருப்பீர்களா?
சிவக்குமார் ; நான் 100% உறுதியாக சொல்கிறேன்… அடுத்த 5 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சி அங்கு நடைபெறாது என கூறியுள்ளார். துணை முதல்வரின் இந்த கருத்துதான் காங்கிரஸ் மேலிடத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.