காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு நிலைமையா? அய்யோ பாவம்!

காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு நிலைமையா? அய்யோ பாவம்!

Share it if you like it

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கும், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கும் வாடகை பாக்கி வைத்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

டெல்லி அக்பர் சாலையில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம். அதேபோல, ஜன்பத் சாலையில் இருக்கிறது அக்கட்சியின் தலைவர் சோனியா வீடு. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு கடந்த சில வருடங்களாகவே வாடகை செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு சமீபகாலமாக எழுந்து வந்தது. இதையடுத்து, சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர், வாடகை பாக்கி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அளித்த பதிலில், “அக்பர் சாலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு 12 லட்சத்து 69 ஆயிரத்து 902 ரூபாய் வாடகை பாக்கி இருப்பதாகவும், 2012 டிசம்பர் ஆண்டுக்குப் பிறகு வாடகை செலுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஜன்பத் சாலையில் இருக்கும் சோனியா காந்தி வீட்டுக்கு 4,610 ரூபாய் வாடகை பாக்கி இருப்பதாகவும், 2020 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு வாடகை செலுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சோனியா காந்தியின் தனிச் செயலாளர் வீணா ஜார்ஜ் வீட்டுக்கு 5 லட்சத்துக்கு 07 ஆயிரத்து 911 ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும், 2013 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு வாடகை செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, சோனியா காந்தி குடும்பத்தினரை பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ‘தேர்தலில் தோற்ற பிறகு சோனியா காந்தியால் வாடகை செலுத்த முடியவில்லை என்றால், அதற்கு ஊழல் செய்ய முடியாததே காரணம்’ என்று வெளுத்து வாங்கி வருகின்றனர். இன்னொரு பா.ஜ.க. பிரமுகரோ, ‘அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி, மனித நேய அடிப்படையில் சோனியா காந்திக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அவரது வங்கிக் கணக்குக்கு அனைவரும் 10 ரூபாய் செலுத்தும்படி கோரிக்கை விடுத்து பிரசாரத்தை துவங்கி இருக்கிறேன். அனைவரும் உதவி செய்யுங்கள்’ என்று கிண்டலாகக் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு, அடப்பாவமே அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு நிலைமையா என்று கேலி செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


Share it if you like it