இந்திய ஐரோப்பிய சாலை போக்குவரத்து கட்டுமானம் – உலகிற்கு வழிகாட்டும் பாரதத்தின் தொலைநோக்கு திட்டம்

இந்திய ஐரோப்பிய சாலை போக்குவரத்து கட்டுமானம் – உலகிற்கு வழிகாட்டும் பாரதத்தின் தொலைநோக்கு திட்டம்

Share it if you like it

கடந்த மாதம் புது தில்லியில் ஜி 20 நாடுகளின் சர்வதேச மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது . பாரத பிரதமரின் தலைமையில் பாரதத்தின் தலைமை ஒருங்கிணைப்பின் கீழ் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் பல்வேறு அமர்வுகள் முக்கியத்துவம் பெற்றது. அதில் அந்தந்த நாடுகளின் தனிப்பட்ட வளர்ச்சி கேந்திர ரீதியான பொருளாதார பங்களிப்புகள் கடந்து உலகளாவிய பொருளாதார பங்களிப்பிற்கு அதி முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் அடிப்படையில் பாரதம் முன்மொழிந்த இந்திய ஐரோப்பிய பொருளாதார சாலை கட்டுமானம் ஜி 20 நாடுகளின் ஏகோபித்த ஆதாரவையும் இந்த அமைப்பை கடந்து பல்வேறு உலக நாடுகளின் பெறும் நம்பிக்கையை வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

பாரதத்தில் தொடங்கும் இந்த சாலை கட்டுமானம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் துருக்கி ஈரான் வழியாக மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து ஐரோப்பாவை சென்றடையும். இந்த சாலை கட்டுமானத்தின் மூலமாக சரக்கு போக்குவரத்து இலகுவாக கையாளப்பட வேண்டும் என்பதே பிரதான இலக்கு . இதன் மூலம் இயற்கையில் கடல் வசதியும் துறைமுக வழியிலான சரக்கு கையாளுகையும் சாத்தியம் இல்லாத பல்வேறு நாடுகளுக்கு இந்த சாலைப்போக்குவரத்து மூலமான சரக்கு போக்குவரத்து வரப் பிரசாதமாக அமையும். மேலும் கடல் வழி போக்குவரத்து அதன் மூலமாக சரக்கு கையாளுகையில் இருக்கும் இடர்பாடுகள் கடற்கொள்ளை இயற்கை பேரிடர்கள் உள்ளிட்ட இழப்புக்கள் எதிர்காலத்தில் முடிவுக்கு வரும்.

இந்திய ஐரோப்பிய பொருளாதார கேரி டோர் என்னும் இந்த சிறப்பு சாலை கட்டுமானம் பாரத தேசத்தின் திட்ட வடிவம் என்றாலும் அது பாரத தேசத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக அல்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்திற்கும் ஆன பொது திட்டமாகத்தான் பாரதம் முன்மொழிந்திருக்கிறது‌ இதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு எழும் உலகளாவிய எதிர்ப்புகள் இதை தகர்க்க வேண்டும் என்ற சூழ்ச்சிகள் எல்லாம் ஆரம்பத்திலேயே களையப்பட்டு விட்டது. ஒருவேளை இந்த திட்டம் பாரதத்தின் தனிப்பட்ட திட்டமாக இருந்திருந்தால் இதன் பாதுகாப்பிற்கென்று வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சீனாவைப் போல குறுகிய மனம் இல்லாத எந்த ஒரு விஷயத்திலும் தானும் வாழ்ந்து பிற நாடுகளையும் வாழ்விக்க வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட பாரதம் அதை இந்த சிறப்பு பொருளாதார சாலை கட்டுமானத்தில் உலகிற்கு மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து விட்டது .அதன் காரணமாகத்தான் இந்த சாலை திட்டத்தை உலகளாவிய திட்டமாக முன்மொழிந்திருக்கிறது .இதை ஜி 20 நாடுகள் ஏக மனதோடு வழி மொழிந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த சாலை கட்டுமானம் தொடங்கி பயன்பாட்டிற்கு வந்துவிடும். அதன் பிறகு உலகளாவிய சரக்கு கையாளகையிலும் சாலை போக்குவரத்திலும் பெரும் மாற்றங்கள் நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.

இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் துருக்கி ஈரான் வழியாக பயணிக்கும். இந்த பிராந்தியத்தில் புதிதாக உருவாக இருக்கும் பல சிறிய நாடுகளின் வழியாக இந்த சாலை கட்டுமானம் பயணிப்பதன் மூலம் அந்தந்த நாடுகளில் தற்போது நீடிக்கும் பெறும் உள்நாட்டு குழப்பங்களும் முடிவுக்கு வரும். பொருளாதார நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கும் இந்த நாடுகளில் எல்லாம் நிரந்தரமான வேலை வாய்ப்புகள் பாதுகாப்பான உள் கட்டமைப்புகள் வரக்கூடும். .இதன் மூலம் அந்தந்த நாடுகளில் இருக்கும் மத பயங்கரவாதம் முடிவுக்கு வரும். அது தெற்காசிய பிராந்தியத்தில் நிரந்தரமான அமைதிக்கும் நாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் நிரந்தர தீர்வாக அமையும்.

தெற்காசிய நாடுகளின் வழியே ஐரோப்பா வரை நீளும் இந்த சாலைப்போக்குவரத்தின் பயன்பாடும் அதன் மூலமாக சரக்கு கையாளுகையும் பல்வேறு உலகளாவிய நாடுகளின் தேவைக்கும் பங்களிப்பிற்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். அதன் காரணமாக இதனால் பயன்பெறக்கூடிய எந்த ஒரு நாடும் தனது தேசத்திற்கு வெளியே எந்த ஒரு பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை பொருளாதாரப் பின்புலத்தோடு அல்லது சித்தாந்த பின்புலம் கொண்ட ஆதரிக்கும் விவகாரத்திற்கு முடிவு வரக்கூடும். இதன் மூலம் உலகளாவிய பொருளாதார பயங்கரவாதமும் பயங்கரவாத ஆதரவு நிலையில் உலக நாடுகளின் பங்களிப்பும் முடிவுக்கு வரும். பெரும்பாலான நாடுகளில் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதி வலுப்பெறும் இது நாடுகளில் பொருளாதார பங்களிப்பை செலவாகும் பெரும் சுமையை குறைக்கும். நாட்டின் நலன் பாதுகாப்பு வளர்ச்சியில் எல்லா நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

அரபு நாடுகளில் இருக்கும் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கையிருப்பும் குறைந்து வரும் பட்சத்தில் நாளடைவில் இந்த இயற்கை வளங்கள் தீர்ந்து போகும். அதன் பிறகு எரிவாயு இயற்கை வாயு இல்லாத நிலையில் அதை மட்டுமே நம்பி இருக்கும் போக்குவரத்து அல்லது இதர உபயோகங்கள் எல்லாம் சிக்கலாக மாறும். இந்த எண்ணெய் வளம் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி கையாளுகை மட்டுமே நம்பி இருக்கும் அரபு நாடுகள் பொருளாதாரம் பெரும் குழப்பம் சீரழிவை எதிர்கொள்ள நேரிடும் . ஆனால் இந்த இந்திய ஐரோப்பிய சாலை போக்குவரத்து கட்டுமானம் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையிலும் தொலைநோக்கு பார்வையில் கட்டமைக்கப்படுவதால் எதிர்காலத்தில் எண்ணெய் வளம் அதன் உபரி பொருட்கள் சார்ந்த தேவைகள் அதற்கான நிர்பந்தங்கள் குறையக்கூடும் . எண்ணெய் வளம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி மட்டுமே நம்பி வாழும் அரபு நாடுகளின் பொருளாதாரம் மீளும். சுழற்சி முறையில் உற்பத்தி பராமரிப்பு கட்டுமானம் சார்ந்த பொருளாதார வளத்தை நோக்கி நகரும்.

குறிப்பாக இந்த சாலை கட்டுமானத்தின் வழி நெடுகிலும் சூரிய சக்தி மின்சாரம் காற்றாலை மின்சாரம் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வது பாதுகாப்பது பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட கூடுதல் கட்டுமானங்களும் முழுமூச்சோடு அமல்படுத்தப்படும். அதன் மூலம் இந்த சாலை கட்டுமானத்திற்கும் அதன் உபரி கட்டுமானங்களுக்கும் நிர்வாகம் பராமரிப்பிற்கு தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருள் சக்திகள் எல்லாம் சூரிய சக்தி காற்றாலை மின்சக்தி மற்றும் மூலம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் பெருமளவில் பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவை குறைக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் பாரதத்தின் சூரிய சக்தி மின்சாரம் காற்றாலை மின்சாரம் உபயோகம் உற்பத்தி பராமரிப்பு எல்லாம் உள்நாட்டு தேவையை கடந்து சர்வதேச ரீதியாக பொருளாதார மூலமாக விரிவாக்கப்படும் . அதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் தனிநபர் நிறுவனம் சம்பந்தப்பட்ட வருமான வாய்ப்புகள் பல மடங்கு கூடும். பாரதம் தொடங்கி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அரபு நாடுகள் வரையிலும் பெரும்பாலும் அதிக அளவில் வெயில் பிரதேசங்களே. இது சம்பந்தப்பட்ட சாலை கட்டுமானத்தின் சூரிய சக்தி மின்சாரத்திற்கு ஒரு பெரும் வரப்பிரசாதம். இங்குள்ள இயற்கையான காற்றும் அதன் பயன்பாடும் காற்றாலை மின்சாரங்களில் உற்பத்தியும் பயன்பாட்டையும் பல மடங்கு விரிவாக்கும். அதன் மூலம் இயற்கை வளங்கள் எரிசக்தி தேவைக்காக பெருமளவில் பயன்படுத்துவது முடிவுக்கு வரும்.

இயற்கை எரிவாயு எண்ணெய் வளம் உள்ளிட்ட பொருட்களின் கையிருப்பு. அதை மட்டுமே நம்பிய பொருளாதாரம் என்று எண்ணெய் வளமாக மட்டுமே சுழன்று கொண்டிருக்கும் அரபு நாடுகளின் பொருளாதாரம் அந்த எண்ணெய் வளத்திலிருந்து விடுபட்டு காற்றாலை சூரிய சக்தி மின்சாரம் என்ற சூழலியல் ஆதரவான பொருளாதாரத்திற்கு மாறும் . மறுபுறம் இயற்கை வளங்களை மட்டுமே நம்பி இல்லாமல் ஆக்கபூர்வமான சூரிய சக்தி காற்றாலை சக்தி உள்ளிட்ட தொலைநோக்கு எரிசக்தி திட்டங்களுக்கு அரபு நாடுகளும் நகரும். இதன் மூலம் பெறக்கூடிய கட்டுமானங்கள் சரக்கு கையாளுகைகள் அந்தந்த நாடுகளின் நிரந்தரமான வேலை வாய்ப்புகள் உள்நாட்டு பாதுகாப்பு கட்டுமானங்கள் என்று அனைத்து துறையிலும் எதிரொலிக்கும். எதிர்காலத்தில் அரபு நாடுகளின் வளர்ச்சியும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

இந்தியா முதல் ஐரோப்பா வரை நீளும் இந்த சாலை கட்டுமானம் அதன் பராமரிப்புகள் அதன் மூலம் முன்னெடுக்கப்படும் காற்றாலை எரிசக்தி மின்சாரங்கள் இதர கட்டுமானங்கள் அதன் மூலமாக வேலை வாய்ப்புகள் எல்லாம் உலகம் முழுவதிலும் பெரும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியிலும் வேலையில்லா திண்டாட்டத்திலும் சிக்கித்துவிக்கும் பல்வேறு நாடுகளுக்கு வரப் பிரசாதமாக அமையும். இதன் மூலம் இந்த ஒற்றை சாலை கட்டுமானம் நிரந்தரமான வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் வழங்கும். உலகளாவிய பஞ்சம் பசி பிணி உள்ளிட்டவற்றிற்கு முடிவு கட்ட முடியும். இவை யாவும் இயற்கை வளங்களை நேரடியாக அழிக்காமல் சூழலுக்கு பாதுகாப்பான இயற்கை வள உபயோகம் பராமரிப்பு உற்பத்தி சார்ந்த எரிசக்தி திட்டமாகவே இருப்பதால் இதன் மூலம் சூழலியலுக்கும் அச்சுறுத்தல் இல்லை. எதிர்காலத்தில் எந்தவிதமான பின்னடைவுகள் எதிர்மறை விளைவுகளும் இல்லாத தொலைநோக்கு திட்டத்தோடு கூடிய கட்டுமானம் என்பதால் எல்லா நாடுகளும் முழுமையாக வரவேற்கும். இதன் மூலம் உலகளாவிய நாடுகளுக்குள் ஒரு இணக்கமான புரிந்துணர்வு எல்லை கடந்த நட்புறவு என்று ஒரு அறிவிக்கப்படாத சமாதான சாலையாகவே இந்த சாலை கட்டுமானம் மாறக்கூடும்..

இந்த இந்திய ஐரோப்பிய சாலை கட்டுமானம் இந்தியாவில் இருந்து தொடங்கி ஐரோப்பாவில் முடிவடைந்து இதன் பலன்கள் எல்லாம் கண்கூடாக உள்நாட்டு பொருளாதார போக்குவரத்து சரக்கு கையாளுகை என்று சம்பந்தப்பட்ட நாடுகளின் பயன்பாட்டிற்கு வரும். அப்போது பாரதம் அடுத்த கட்டத்திற்கு இந்த சாலை கட்டுமானத்தை விரிவாக்கம் செய்யும். பாரதத்திலிருந்து கீழ் திசையில் வங்கதேசம் மியான்மர் தாய்லாந்து மலேசியா என்று ஆங்காங்கே சிறிய அளவில் இருக்கும் சாலை கட்டுமானங்கள் கிடப்பில் இருக்கும் சாலை கட்டுமானங்கள் பயன்படுத்தப்படாத பழைய கட்டுமானங்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெறும் . பாரதம் இந்தியாவில் இருந்து கீழை நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு சாலை கட்டுமானத்தை உயிர்ப்பிக்கும் பட்சத்தில் இந்த சாலை கட்டுமானம் ஒரு உலகளாவிய இணைப்பு சாலையாக மாறக்கூடும். அப்போது மியான்மர் வங்கதேசம் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் பாரதத்தோடு நேரடியான சாலை இணைப்பை பெறக்கூடும். இதன் மூலம் இந்த நாடுகளின் சர்வதேச சரக்கு கையாளுகை சரக்கு போக்குவரத்து கடந்து சுற்றுலா ஆன்மீக சுற்றுலா பொருளாதார பரிவர்த்தனைகள் பன்மடங்கு பெருகும். இதன் மூலம் பண்பாடு கலாச்சார ரீதியாக நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நாடுகளின் கட்டுமானமும் ஆன்மீகப் பிணைப்பும் இன்னும் பன்மடங்கு உறுதியாகும். இதன் மூலம் தற்போதைய வங்கதேசம் மியான்மர் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளுக்கு எல்லாம் நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

சீனா முன்மொழிந்த பட்டுப்பாதை திட்டம் என்பது முழுமையாக சீனாவின் பொருளாதார நலன் சார்ந்தது. அந்தத் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை தன் பக்கம் நிறுத்த வேண்டும். தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் உலக நாடுகள் கொண்டு வர வேண்டும் என்ற ஆதிக்கம் மனோபாவம் சார்ந்தது . ஆனால் பாரதம் முன்மொழிந்த இந்த இந்திய ஐரோப்பிய தரைவழி சாலை கட்டுமானம் என்பது தானும் வாழ்ந்து உலக நாடுகளையும் வாழ்விப்பது . குறிப்பாக பெரும் உள்நாட்டு குழப்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏழை நாடுகளை எல்லாம் தாயுள்ளத்தோடு அரவணைத்து அவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு வருமானம் பொருளாதார வளங்களை கட்டமைத்து தரும் ஒரு தொலைநோக்கு திட்டமாகும் . அந்த வகையில் தானும் வாழ்ந்து உலக நாடுகளையும் வாழ்வைக்கும் உலகின் குரு பாரதம் என்பதை இந்த ஐரோப்பிய இந்திய சாலை கட்டுமான திட்டத்தின் மூலம் பாரதம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு மெய்ப்பித்திருக்கிறது.


Share it if you like it