கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்தும் முறை பற்றி 2015-ஆம் ஆண்டிலேயே சீன விஞ்ஞானிகள் மற்றும் அந்நாட்டு சுகாதாரத்துறையினரும் விவாதித்திருப்பதாக அதிர்ச்சிகரமான செய்தியினை THE AUSTRALIAN என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கான ஆவணம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அப்பத்திரிக்கை நிறுவனம் பகீர் தவகலை அண்மையில் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்று, வூஹான் இறைச்சி சந்தையில் மனிதருக்கு பரவியதாக கூறப்படும் நிகழ்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வூஹான் விஞ்ஞானிகள் மூன்று பேர் கொரோனா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
சீனாவிற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் அமெரிக்க உளவுத்துறை மற்றும் THE AUSTRALIAN பத்திரிக்கை தெரிவித்து உள்ள குற்றச்சாட்டு குறித்து பேச முன்வருவார்களா? அல்லது வழக்கம் போல கள்ள மெளனமாக இருந்து விடுவார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் இயற்கையில் பிறந்தது, மனிதர்களால் செயற்கையாக
உருவாக்கப்பட்டது அல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்-sciencenews.org.
அதை "சீன வைரஸ்" எனும் டிரம்புக்கும், அவரது சிங்கிகளாகிய சங்கிகளுக்கும்
இது சமர்ப்பணம்.— Arunan Kathiresan (@Arunan22) March 27, 2020
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடும் வைரஸை அறிவியலில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் பிறந்த இடத்திலேயே சுக்குநூறாய் உடைத்துத்தள்ளியிருக்கிறது சீனா.|#CoronavirusOutbreak|#IndiaawaitsCovidaid|#ModiMadeDisaster
More:https://t.co/pNoc3x4gO5 pic.twitter.com/vyr9Tc7hon— CPIM Tamilnadu (@tncpim) March 29, 2020