வெறும் மூன்றரை மணி நேரத்தில் டில்லி சென்றடையலாம் – நாராயணன் திருப்பதி !

வெறும் மூன்றரை மணி நேரத்தில் டில்லி சென்றடையலாம் – நாராயணன் திருப்பதி !

Share it if you like it

2023-24 ம் ஆண்டு மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கட்டண பரிவர்த்தனைகள் (UPI) நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

உங்களுக்கு தெரியுமா?

  1. குஜராத்திற்கு மேலும் ஒரு புல்லட் ரயில் திட்டம். தற்போது குஜராத்தின் சபர்மதியிலிருந்து டில்லிக்கு 12 மணிநேரம் ஆகின்ற நிலையில், இந்த ரயில் மூன்றரை மணி நேரத்தில் டில்லி சென்றடையும்.
  2. 2023-24 ம் ஆண்டு மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கட்டண பரிவர்த்தனைகள் (UPI) நடைபெற்றுள்ளன.

3.ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-ஃபோன் கேமரா உதிரி பாகங்களை தயாரிக்க அல்லது ஒன்றிணைக்க முருகப்பா மற்றும் டாடாவின் டைட்டன் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

  1. இண்டிகோ விமான நிறுவனம் மேலும் 500 பயணிகள் விமானங்களை கொள்முதல் செய்ய ஏர் பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் 1300க்கும் அதிகமான விமானங்களை கொண்ட நிறுவனமாகும் இண்டிகோ.
  2. டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா நிறுவனம் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து 250 பயணிகள் விமானங்களையும், போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் பெறுவதற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.
  3. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு மட்டும், இந்த ஆண்டு 5000 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதை இலக்காக வைத்துள்ளது மஹாராஷ்டிரா மாநிலம்.
  4. 2023 ல் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் 735 பேர், சீனாவில் 495 பேர், இந்தியாவில் 169 பேர், ஜெர்மனியில் 126 பேர்,ரஷ்யாவில் 105 பேர். இவ்வாறு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it