நவீன் ஜிண்டாலுக்கும் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்!

நவீன் ஜிண்டாலுக்கும் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்!

Share it if you like it

முகமது நபி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி நவீன் ஜிண்டாலுக்கும் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுப்பதால், தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, சிவலிங்கம் குறித்து தஸ்லிம் தெஹ்ரான் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதி அவதூறாகப் பேசினார். இதை நுபுர் ஷர்மா பலமுறை கண்டித்தபோதும் தொடர்ந்து சிவலிங்கத்தைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முகமது நபி குறித்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார். பா.ஜ.க. ஊடகப் பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜிண்டாலும் நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் அந்த விவாத நிகழ்ச்சியோடு முடிவுக்கு வந்த நிலையில், Alt நியூஸ் என்கிற பெயரில் நிறுவனத்தை நடத்தி வரும் முகமது ஜுபைர், மேற்படி நிகழ்ச்சியில் தெஹ்ரான் பேசியதை கட் செய்து விட்டு, நுபுர் ஷர்மா பேசியதை மட்டும் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, இஸ்லாமியர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தினார். மேலும், இஸ்லாமிய நாடுகளில் தலைவர்களையும் டேக் செய்து தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரைப் போலவே இன்னும் சில அடிப்படைவாதிகளும், தேச விரோதிகளும், துரோகிகளும் இஸ்லாமிய தலைவர்களை டேக் செய்து நுபுர் ஷர்மா பேசிய வீடியோவை பதிவிட்டு வந்தனர். இதையடுத்து, இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நவீன் ஜிண்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும், நுபுர் ஷர்மாவுக்கும், நவீன் ஜிண்டாலுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர்கள் பலரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருந்தது. ஆகவே, தங்களுக்கு பாதுகாப்புக் கோரி இருவரும் டெல்லி போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் தலா 2 போலீஸார் வீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதேசமயம், நுபுர் ஷர்மாவுக்கும், நவீன் ஜிண்டாலுக்கும் ஆதரவாக ஹிந்துக்களும், பா.ஜ.க.வினரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால் என்கிற ஹிந்து டெய்லர், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் புகார் செய்யவே, அவரை ராஜஸ்தான் மாநில போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில், கடந்த வாரம்தான் ஜாமீனில் வெளியே வந்தார் கன்ஹையா லால். இதன் பிறகு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து கன்ஹையா லாலுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது.

இதுகுறித்து காவல் நிலையிலும் புகார் கொடுத்த அவர், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கையும் வைத்தார். ஆனால், போலீஸார் அலட்சியமாக இருந்து விட்டனர். இதனால், நேற்று முன்தினம் காலை கஸ்டமர்களைப் போல கடைக்கு வந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர், கன்ஹையா லாலை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தனர். மேலும், இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டவர்கள், இன்னொரு வீடியோவில் பிரதமர் மோடியும் இப்படித்தான் கொல்லப்படுவார் என்று கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில்தான், டெல்லி பா.ஜ.க. ஊடகப்பிரிவு முன்னாள் தலைவர் நவீன் ஜிண்டால், தனக்கும் கொலை மிரட்டல் வருவதாகவும், தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஜிண்டால், “எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இன்று அதிகாலையில் கூட ஒரு கொலை மிரட்டல் வந்தது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும், கன்ஹையா லால் கொலை செய்யப்பட்ட வீடியோவையும் எனக்கு அனுப்புகின்றனர்.

ஆகவே, வெளியில் நடமாட எனக்கு பயமாக இருக்கிறது. உயிர் பயம் காரணமாக எனது குழந்தைகளை வேறு இடத்துக்கு அனுப்பி விட்டேன். தற்போது எனக்கு 2 போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்கு உள்ளனர். நான் வெளியே செல்லும்போது ஒருவர் மட்டுமே என்னுடன் வருவார். மற்றொரு காவலர் எனது வீட்டில் இருப்பார். நான் அடிக்கடி வெளியே செல்வதால் எனது உயிருக்கு அதிக அச்சறுத்தல் உள்ளது. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இதுதொடர்பாக டெல்லி போலீஸாருக்கு பலமுறை கடிதம் எழுதிவிட்டேன். ஆனால், எனது கோரிக்கைக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை” என்றார்.

இதேபோலதான், பஞ்சாப்பில் புதிதாக பதவியேற்ற ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தில் வி.வி.ஜ.பி.க்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை ரத்து செய்தது. இதனால், பிரபல பஞ்சாபி பாடகர் மூஸ்வாலா தாதா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதன் பிறகே, வி.வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பை மீண்டும் வழங்கியது பஞ்சாப் அரசு. ஆகவே, அதேபோல இன்னொரு உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பு போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Share it if you like it