டெல்லியிலும் புல்டோசர் கலாசாரம்!

டெல்லியிலும் புல்டோசர் கலாசாரம்!

Share it if you like it

டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏப்ரல் 16-ம் தேதி நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை புல்டோசர்கள் மூலம் இடிக்கும் பணியை துவங்கி இருக்கிறது புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன்.

பாரத நாட்டில் சமீபகாலமாகவே ஹிந்துக்களின் பண்டிகைகளை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 2-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஹிந்துக்கள் சைக்கிள் பேரணி உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி, கரௌளி பகுதியில் நடந்த சைக்கிள் பேரணியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த ஹிந்துக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இதில் ஏராளமான ஹிந்துக்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த வாரம் ராமநவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த ஊர்வலத்திலும் குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹிந்துக்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், இம்மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஊர்வலம் நடந்தது. அப்போது, இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் ஹிந்துக்கள் ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கல் வீச்சில் ஏராளமான ஹிந்துக்கள் காயமடைந்தனர். இதனிடையே, ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி ஹிந்துக்கள் ஊர்வலத்தை நோக்கி பலமுறை துப்பாக்கியில் சுட்டான். இதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் உட்பட ஹிந்துக்கள் பலரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனிடையே, ஹிந்துக்களின் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டே இந்த வன்முறையை அரங்கேற்றியது விசாரணையில் தெரிவந்திருக்கிறது.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளை இடிக்கும் பணியை துவங்கி இருக்கிறது புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன். மேலும், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி டெல்லி முழுவதும் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதாவது, வங்கதேசத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஏராளமானோர் டெல்லியில் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்கள் புதுடெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சாலையை ஆக்கிரமித்தும், புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்தும் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு, கடைகளையும் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2020-ம் டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டவர்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தால் தாங்கள் அத்துமீறி ஊடுருவி இருப்பது அம்பலமாகி அகதிகள் முகாமில் அடைக்கப்படுவோம். அல்லது மீண்டும் வங்கதேசத்துக்கே நாடு கடத்தப்படுவோம் என்று பயந்து இக்கலவரத்தில் ஈடுபட்டார்கள். இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு டெல்லியிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். காரணம், இதுபோன்ற கலவரங்களின்போது தங்களுக்கு ஆதரவாக இருப்பதால்தான். ஆனால், தற்போது ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலவரத்தில் ஈடுபட்டதுதான் இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு வினையாக முடிந்து விட்டது. ஆம், ஜஹாங்கிர்புரியில் வன்முறையில் ஈடுபட்ட பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், ரோஹிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில்தான் இந்த புல்டோசர் கலாசாரம் இருந்து வருகிறது. அதாவது, வன்முறையில் ஈடுபடுபவர்கள், பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதுதான் இந்த புல்டோசர் கலாசாரம். இதன்படி, மேற்கண்ட மாநிலங்களில் பலரது வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இது தற்போது டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடு, கடைகளை இடிப்பதற்காகவும் புல்டோசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நாடு முழுவதும் புல்டோசர் கலாசாரம் வந்துவிடும் போல் தெரிகிறது.


Share it if you like it