இந்தியாவுக்கு முழு ஆதரவு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் உறுதி!

இந்தியாவுக்கு முழு ஆதரவு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் உறுதி!

Share it if you like it

ஜி 20 தலைமையை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருக்கிறார்.

ஜி 20 அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லிக்கு வந்திருக்கும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டதோடு, உக்ரைன் போர் விவகாரம் குறித்து அதிகம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்பேச்சு குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜி 20 தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம். சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு தீர்வு காண ஜி 20 மாநாடு உதவும் என்று நம்புகிறோம். வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசவிருக்கிறோம்.

சர்வதேச அரங்கில் தங்களுக்கு இருந்த அதிகாரம் பறிபோனதால் ஆத்திரத்தில் உள்ள மேற்கத்திய நாடுகள், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. இது குறித்தும் பேசவிருக்கிறோம். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் சீர்குலைக்கும் கொள்கைகளால், உலகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it