நம்பிக்கை வாக்கெடுப்பு: சிவசேனா கூட்டணி டமால்..!

நம்பிக்கை வாக்கெடுப்பு: சிவசேனா கூட்டணி டமால்..!

Share it if you like it

மகாராஷ்டிராவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்று இருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் துணையுடன் சிவசேனாவின் ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வந்தது. ஆட்சி அமைந்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடி இருக்கிறது. இதுதவிர, சட்டம் ஒழுங்கு தமிழகம் போன்றே சந்தி சிரிக்கும் அளவிற்கு சென்று விட்டது. இதன்காரணமாக, முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அக்கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அந்தவகையில், ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனாவில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதையடுத்து, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க ஷிண்டே தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஷிண்டே அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கின்றனர். இதையடுத்து, ஆளுநர் உத்தரவினை தொடர்ந்து இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று இருக்கிறது. இதில், பா.ஜ.க கூட்டணி 164 நான்கு வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it