புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் திராவிட மாடல் பஸ்ஸில் பயணிகள் ஹாயாக குளித்துக் கொண்டே பயணம் செய்யலாம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தி.மு.க. அரசு பதவியேற்ற கடந்த 2 ஆண்டு காலத்தில், இதுவரை புதிதாக பஸ்கள் எதுவும் வாங்கவில்லை. அதேபோல, பழைய பஸ்களையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதில்லை. இதனால், பஸ்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றுவிடுவதும், அப்பேருந்தை பயணிகள் தள்ளிக்கொண்டு செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதோடு, பல பஸ்களில் டயர் தேய்ந்ததால், வெடித்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காய்லாங் கடைக்குச் செல்ல வேண்டிய பஸ்களை எல்லாம், புறநகர் பேருந்துகளாக இயக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், இப்படியொரு பேருந்தில் பயணிகள் நனைத்து கொண்டே பயணித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி ஒரு புறநகர் பேருந்து சென்றது. அப்போது, இடைவழியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால், பஸ்ஸுக்குள்ளும் மழைநீர் ஒழுகியது. இதில், பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, பேருந்தின் மேற்கூரை அந்தளவுக்கு டேமேஜ் ஆகி இருந்திருக்கிறது. இதை பஸ் என்று நினைத்து திண்டுக்கல் டூ மதுரைக்கு இயக்கி இருக்கிறார்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், திராவிட மாடல் அரசு, புதிய மாடல் பஸ்ஸை அறிமுகம் செய்திருக்கிறது. இப்பேருந்தில் பயணிகள் குளித்துக் கொண்டே ஹாயாக பயணிக்கலாம் என்று கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.