2 வருட தி.மு.க. ஆட்சி… பங்கம் செய்யும் பாடல்!

2 வருட தி.மு.க. ஆட்சி… பங்கம் செய்யும் பாடல்!

Share it if you like it

தி.மு.க. தனது 2 வருட சாதனையை பொதுக்கூட்டம் போட்டு விளக்கிக் கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் ஒரு பாட்டை போட்டு தி.மு.க. அரசை பங்கம் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூற, தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதேசமயம், தி.மு.க. அரசின் 2 வருட சாதனை இதுதான் என்று சொல்லி இணையத்தில் ஒரு பாடலை வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். இப்பாடல் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“ரெண்டு வருஷம் இந்த தி.மு.க.யின் ஆட்சிதான், நாடு முழுவதும் நாஸ்தி கலவரம்… பொறுக்க முடியல இந்த ஒரு குடும்ப ஆட்சிதான், மக்களுக்கு அவதிப்படும் நிலவரம்…” என்று தொடங்கும் இப்பாடல், “தாலிக்குத்தான் தங்கம் இல்ல, டாஸ்மாக்குக்கு பஞ்சம் இல்ல… தட்டிக்கேட்டா நீ ஜெயலுக்குள்ள, விடியல் ஆட்சி குடிகாரன் சொல்லும் சாட்சி… கஞ்சா போதையில் கொலையத்தான் பாரு, கல்யாண மண்டபத்தில் சரக்கூத்தும் சாரு… சொன்ன வாக்கை எல்லாம் நிறைவேத்து வாரு, உ.பி. சொல்லும் இதை நம்பித்தான் பாரு… விலைவாசி ஏறுதுங்க, விதிகள் மாறுதுங்க, காவல் நிலையத்திற்குள் ரௌடியிசம் பாரு…” என்று நீண்டு கொண்டே செல்கிறது.

இதில், ஹார்ட் பீஸ் என்னவென்றால், பாடல் வரிகளுக்கு தகுந்தவாறு படங்களையும், வீடியோக்களையும் காட்டி இருப்பதுதான். உதாரணமாக, திருச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரை அமைச்சர் கே.என்.நேரு, தலையில் அடித்தது, பெண்களை பார்த்து அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்லதானே வந்தீங்க என்று நக்கலாக கேட்பது, கட்சித் தொண்டரை அமைச்சர் நாசர் கல்வீசி தாக்கியது, மனு கொடுத்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மண்டையிலேயே அடித்தது, வேங்கைவயல் தண்ணீர் தொட்டி, தமிழகத்தில் கொலை, கொள்ளை என எவ்வளவோ பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்க, எதுவுமே நடக்காததுபோல் முதல்வர் ஸ்டாலின் ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் பார்த்தது என்று காட்சிப்படுத்தி இருப்பதுதான் ஹைலைட்.

பாடலைக் காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it