விளம்பரமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா முதல்வரே?

விளம்பரமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா முதல்வரே?

Share it if you like it

செஸ் போட்டி விளம்பரத்தை பார்த்து விட்டு முதல்வர் ஸ்டாலினை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28- ஆம் தேதி நடைபெற உள்ளன. இப்போட்டிகள், அடுத்த மாதம் ஆகஸ்டு 10- ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவில், முதன் முறையாக இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் செஸ் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 19- ஆம் தேதி ஒலிம்பியாட் போட்டியின் தீப தொடர் ஓட்டத்தை பாரதப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனிடையே, இந்த தீபம் 40 நாட்களில் இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள முக்கியமான 75 நகரங்களில் பயணித்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு வந்தடைகிறது. இதனை தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் விதமாக வருகிற 28- ஆம் தேதி சென்னை வருகிறார்.

இந்த நிலையில் தான், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி ஒன்றினை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கின்றனர். ஆனால், இக்காணொளியில் செஸ் விளையாட்டின் மூலம் இந்தியாவிற்கே, பெருமைச் சேர்த்த விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா உள்ளிட்ட இருவரும் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.

Image

Share it if you like it

One thought on “விளம்பரமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா முதல்வரே?

  1. Neglect of Tamilnadu’s Chess Maestros Mr. ViswanathanAnand and Pragyananda is a great mistake committed by the Tamilnadu Government.

Comments are closed.