இஸ்ரேல் துறைமுகத்தை கைப்பற்றிய அதானி குழுமம்!

இஸ்ரேல் துறைமுகத்தை கைப்பற்றிய அதானி குழுமம்!

Share it if you like it

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் மற்றும் இஸ்ரேல் நாட்டின் காடெட் குழுமம் ஆகியவை இணைந்து இஸ்ரேல் நாட்டின் 2-வது பெரிய துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை 120 கோடி டாலர் ஒப்பந்த விலைக்கு வாங்கி இருக்கின்றன.

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக விளங்குவது அதானி குழுமம். இக்குழுமம் பல விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றி நாட்டின் போக்குவரத்தை பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதன் கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ், தனது வர்த்தகச் சேவையை வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யும் முக்கியமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை இயக்கி வருகிறது. தற்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் இஸ்ரேல் துறைமுகத்தைக் கைப்பற்றி இருக்கிறது.

இஸ்ரேல் மதிப்பின்படி 410 கோடி செகல்ஸுக்கு துறைமுகம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஹைஃபா துறைமுகத்தை 2054-ம் ஆண்டுவரை அதானி மற்றும் அபெடெட் குழுமம் நடத்தும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதிச் செலவு குறையும், துறைமுகத்தில் நீண்டகாலம் கப்பல்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதுகுறித்து இஸ்ரேல் நிதியமைச்சர் அவிக்டார் லிபர்மான் கூறுகையில், “ஹைஃபா துறைமுகம் தனியார்மயமாக்கப்பட்டிருப்பதால், இனி போட்டி அதிகரிக்கும், இறக்குமதிச் செலவு குறையும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின்படி ஹைஃபா துறைமுகத்தின் 70 சதவீதப் பங்குகள் அதானியிடமும், 30 சதவீதம் காடெட் நிறுவனத்திடமும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஹைஃபா துறைமுகத்தை ஷாங்காய் சர்வதேச துறைமுக குழுமம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 98 சதவீத இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இஸ்ரேல் கடல்பரப்பு வழியாகவே நடக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கடல்சார் வணிகத்தை மேம்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டு வருகிறது. ஹைஃபா துறைமுகம் மண்டல ரீதியாலான முனையாக மாறும்போது, வளைகுடா நாடுகளுடன் புதிய வர்த்தக உறவை வைத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share it if you like it