தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் தங்களுக்கும் உரிமை தொகை வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். எனினும், இவரது ஆட்சியில் இன்று வரை பூரண மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை. இதன்காரணமாக, குடிப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த ஆட்சியில் குடும்ப பெண்கள், இளம் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவிகளும் மதுவிற்கு அடிமையாகும் கொடூர சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனிடையே, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லப் பாண்டியன், ’ரெட் பிக்ஸ் யூ டியூப்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
கட்சி கொடி இல்லாத கிராமங்கள் இருக்கலாம். கட்டிங் போடாத மனிதர்கள் இல்லை. நாங்கள் கோட்டரில் ’கை’ வைத்தால்தான் நீங்கள் கோட்டையில் கொடியை ஏற்ற முடியும். எங்களுக்கும் உரிமை தொகையை அரசு வழங்க வேண்டும் என அவர் பேசியிருக்கிறார். இவரது, பேச்சின் மூலம் தமிழகத்தின் நிலைமை? எந்த அளவிற்கு சென்று விட்டது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
.