என் பெயரை உச்சரிக்க எனது பாட்டி திணறுவார். இதனால், என்னை தாலி தாலி என்று தான் அழைப்பார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், வெட்டி விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இந்த, அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. எனினும், எதிர்பார்த்த வகையில், இந்த அரசின் செயல்பாடுகள் இல்லை. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழகத்தில், சிறு மற்றும் குறு தொழில்கள் தொடர்ந்து அழிவு பாதையில் செல்வாதக சொல்லப்படுகிறது.
இதனை, எல்லாம் கருத்தில் கொண்டு களைய வேண்டிய இடத்தில் இருப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், அதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் வெட்டி விளம்பரங்களுக்கு மட்டுமே முதல்வர் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான், behindwoods யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு முதல்வர் அளித்த பேட்டி நெட்டிசன்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.