நானே சொல்கிறேன் தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது: நீங்க என்ன நினைக்கிறீர்கள்… ஸ்டார்ட் மியூசிக்!

நானே சொல்கிறேன் தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது: நீங்க என்ன நினைக்கிறீர்கள்… ஸ்டார்ட் மியூசிக்!

Share it if you like it

நல்லாட்சி தருவதாக நான் நினைக்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, சட்டம் ஒழுங்கு இருந்து வருகிறது என்பதே கசப்பான உண்மை. கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, பெண் காவலர்களும், அரசு ஊழியர்களும் ஒருவித அச்சத்துடனே தங்களது நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் அண்மையில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனிடையே, தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராணுவ வீரரான பிரபு அண்மையில் தி.மு.க. கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். இப்படியாக, தமிழகத்தில் இந்த விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்து இருக்கிறது. அந்த வகையில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அறிஞார் அண்ணா மற்றும் கலைஞர் சமாதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, நல்லாட்சி தருவதாக நான் நினைக்கிறேன். ஆகவே, பத்திரிகையாளர்கள் எனக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதுதான், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it