தர்மபுரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் தனது தந்தையை இழந்த மகன் வெளியிட்ட காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில். இவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மற்றும் பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதை தனது முழுநேர கடமையாக கொண்டவர். காலையில் தொடங்கி மாலை வரை மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களை ட்விட்டரில் வசைப்பாடி பொழுது போக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு.
உ.பி., ம.பி. என பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் பற்றியே சிந்தித்து தனக்கு பி.பீ. ஏற்றிக்கொண்டு அதனை உ.பிஸ்களுக்கு மடைமாற்றி அரசியல் செய்ய கூடியவர் எம்.பி. செந்தில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக, இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஐ.சி.யூ வார்டில் ஒரு மருத்துவர் கூட இல்லாததால் அப்பாவி ஒருவர் உயிர் இழந்து இருக்கிறார். தனது தந்தையை இழந்த மகன் அந்த மருத்துவமனையின் அவலத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
பா.ஜ.க.வை பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்கும் எம்.பி. தனது தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
