இளம் பெண் ஒருவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தள்ளி விட்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், பொதுமக்களை மிரட்டுவதில் இவருக்கு நிகர் இவரேதான். இதனிடையே, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய பொன்முடி, ஓசி பஸ்லதானே வந்தீங்க என்று மிகவும் கேவலமாகக் கூறினார். தொடர்ந்து, தனது தொகுதி மக்கள் போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தை நடத்த வந்த பொன்முடி, ஒருவரை பார்த்து வேலையை பார்த்துக்கிட்டு போய்யா என்றார். அதேபோல, திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைக்க வந்த பொன்முடியிடம், மக்கள் குறைகளை சொல்ல, பதிலுக்கு அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சுட்டீங்க என்று ஆவேசமாக பேசினார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி அண்மையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருந்தார். அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, தையல் மெஷின், கேஸ் ஸ்டவ் என பல பொருட்களை வழங்கி விட்டு பேசினார். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் எழுந்து எல்லாம் குறையாகத்தான் இருக்கு என்று சொன்னார். உடனே ஆத்திரமடைந்த பொன்முடி, அப்பெண்ணைப் பார்த்து, எரிச்சலுடன் சைகையில் கையை வைத்து வாயை மூடுக்கிட்டு உட்காரு என்று சொன்னவர்.
மீண்டும் அந்தப் பெண் பேச முயற்சிக்கவே, உங்க வீட்டுக்காரர் இருக்காரா என்று கேட்க, அப்பெண் அவர் எப்பவோ போய்ச் சேர்ந்துட்டார் என்று சொன்னார். உடனே, நக்கலாக சிரித்த பொன்முடி, நல்ல வேளை அவரு போயிச் சேர்ந்துட்டார் என்று கூறவே, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படியாக, அமைச்சரின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது, இளம் பெண் ஒருவர் பொன்முடிக்கு முன்னால் சென்று இருக்கிறார். இதனால், கோவமடைந்த அவர் அப்பெண்மணியை தள்ளி விட்ட காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.