Share it if you like it
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாணவிக்கு கிடைத்த மதிப்பெண் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பிளஸ் +2 அரசு பொதுத்தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஆர்த்தி என்பவர் தனது மதிப்பெண் பட்டியலை பார்த்து கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். அதாவது, தமிழில் 100-க்கு 138 மார்க், இதர நான்கு பாடங்களில் அவர் தோல்வி அடைந்துள்ளார். மாணவியின் இந்த மார்க் ஷீட்தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Share it if you like it