அண்ணாமலை சொன்ன கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கெஞ்சி இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. சொத்து பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்த விவகாரம், பொதுமக்கள் மத்தியில் இன்று வரை பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இதையடுத்து, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தர். அதன்படி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் பா.ஜ.க. தலைவர் மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தாக்கல் செய்த பின்பு, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதையடுத்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் :
“அண்ணாமலை சொன்ன அவதூறு கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். தி.மு.க யார் மீதும் பொய் வழக்கு போடாது. நிச்சயமாக அண்ணாமலைக்கு தண்டனை பெற்று தரப்படும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்துளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்டு கதறி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.