உதயநிதி ஸ்டாலினுக்கு மற்றொரு பவர்புல் துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.
எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதையடுத்து, தனது அன்பு மகன் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். தொடர்ந்து, சேப்பாக்க – திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெற செய்தார். மேலும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். இப்படியாக, தி.மு.க.வில் உதயநிதியின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் உதயநிதிக்கு விளையாட்டுத்துறையையும் தாண்டி மற்றொரு பவர்புல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது என பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கூறியுள்ளார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும்,, விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.