பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.க.வை வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;
தமிழகத்தில் கள்ளச்சாரயம் புழங்குவது கூட தெரியாமல், ஐ.பி.எல். போட்டிகளை காண ஆர்வமாக பல மணி நேரங்களை கிரிக்கெட் மைதானத்தில் செலவிடும் முதல்வர் திரு. முக.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? இல்லை வெறும் காட்சியா? எந்த கள்ளச்சாரயம் வரக் கூடாது என காரணம் கூறி தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபான கடைகளை கோவில் பள்ளிக்கூடம் என எந்த சுற்றமும் பார்க்காமல் திறந்து, இலக்கு வைத்து விற்கும் தமிழக அரசுக்கு இன்று கள்ளச்சாரயாம் தன் மாநிலத்தின் சரளமாக புழங்குவது தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் இறந்த தும்,மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என்ற செய்தி பகீரென இருக்கிறது.
இறந்த உயிர்களை நம்பி எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? இறந்தவர்களின் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது? அரசு கஜானாவில் இருந்து டாஸ்மாக் சாராயம் விற்ற காசை எடுத்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடாக கொடுத்து விட்டால் போதுமா? அதுதான் நல்ல அரசா? எதிர்க்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் நடத்தக் கூடாது என்றீர்கள். உங்கள் கட்சியினர் அனைவரும் சேர்ந்து தமிழகத்தில் விதவைகள் அதிகம் என்று ஓலமிட்டார்கள். உங்கள் கைக்கூலிகளான சமூக ஆர்வலர்கள் மூடு டாஸ்மாக்கை மூட என்றல்லாம் ஒப்பாரி வைத்தார்கள்.
ஆனால், ஒருபுறம் தமிழக அரசு லேபில் ஒட்டி மதுபானம் விற்கிறது. மறுபுறம் லேபில் ஒட்டாமல் பாட்டில்களின் கள்ளச்சாராயம் சரமாள புழங்குகிறது. இதுதானா திராவிட மாடல் ஆட்சியா? கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இந்த சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கவே இல்லையே? இப்போது நடக்கிறது என்றால் அந்த அவலட்சணத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்றல்லவா பொருள்?
முதல்வரே தயவு செய்து தாழ்மையுடன் தமிழக மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அரசியல் குடும்பத்தில் பிறந்த உங்கள் ஆசைக்காக முதல்வர் பதவிக்கு வந்தீர்கள். ஆசை தீர்ந்துவிட்டது என்றால் பதவி விலகவும். பாவம் தமிழகம் பிழைத்துக் கொள்ளட்டுமே?
யோசிங்கள் முதல்வரே!