ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க. மேலிடம் மீண்டும் தனது கட்சியில் சேர்த்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின், தமிழன் பிரசன்னா, ஆர்.எஸ். பாரதி வரிசையில் இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர், மற்றவர்களை விட மிகவும் ஆபாசமாக பேசக்கூடியவர். இவரது, அருவருக்கதக்க பேச்சு பொதுமக்களின் முகத்தை சுளிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தி.மு.க.வின் ஆபாச பேச்சாளர் அண்மையில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகை தி.மு.க. நிர்வாகி மீது காவல்துறையில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து, தி.மு.க. மேலிடம் கிருஷ்ணமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டது. இச்சம்பவம், நிகழ்ந்து சில மாதங்களை கடந்து விட்ட நிலையில், தி.மு.க. மேலிடம் கிருஷ்ணமூர்த்திக்கு பாவ மன்னிப்பு அளித்து மீண்டும் அவரை கட்சியில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.