மின் கட்டண உயர்வு: தி.மு.க.வின் பித்தலாட்டம் அம்பலம்!

மின் கட்டண உயர்வு: தி.மு.க.வின் பித்தலாட்டம் அம்பலம்!

Share it if you like it

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டணம் குறித்து தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த பொழுது, அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் மு.க. ஸ்டாலின். இவர், மத்திய அரசு மற்றும் மாநில அரசு மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர். இதுதவிர, மாநில அரசு கொண்டு வந்த பல திட்டங்களையும், சட்டங்களையும், மிக கடுமையாக எதிர்த்தவர். இப்படியாக, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று அ.தி.மு.க. அரசை மிக கடுமையாக சாடி இருந்தார்.

அந்த வகையில், “200 முதல் 500 யூனிட்டிற்குள்ளும் – 500 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் இல்லங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என அப்பொழுதைய, ஆளும் கட்சியான அ.தி.மு.க. அரசு அறிவித்து இருந்தன. இதற்கு, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனங்களை தெரிவித்து இருந்தன.

இதனை தொடர்ந்து, கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியதாவது; இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கீடும் முறை கொண்டு வரப்படும். இதனால், இரண்டு மாதங்களுக்கு 1000 – யூனிட்களுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயன் பெறுவர். மின்சாரக் கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைக் கட்டணம் 50 ரூபாய் தடை செய்யப்படும் என தி.மு.க. தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தன.

இந்த நிலையில் தான், மின் கட்டணம் உயர்த்தப்படும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விடியல் ஆட்சியின் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கம் போல பொதுமக்களுக்கு இனிமா கொடுத்து இருக்கிறார். இதுதான், தற்பொழுது பேசுப் பொருளாக மாறி இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி மற்றும் தி.மு.க. ஆட்சியின் கட்டண ஒப்பீடு உங்கள் பார்வைக்கு இதோ.

பழைய மின்சார கட்டணம்: 0 – 100 Unit – இலவசம்:

101-200 – 170

201-300 – 530

301-400 – 830

401 – 500 – 1130

திராவிட மாடல் ஆட்சியின் மின்சார கட்டணம்: O-100 – இலவசம்:

101-200 – 225

201-300 – 675

301-400 – 1125

401-500 – 1725

Image

Share it if you like it