ஓசி சிகரெட் கேட்டு தரமறுத்த கடையின் உரிமையாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய தி.மு.க. கவுன்சிலர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்தான செய்தியினை மாலை மலர் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடைரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 46). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று இவரது கடைக்கு காரமடை பஞ்சாயத்து யூனியன் தி.மு.க. கவுன்சிலர் ரவி (50), அவரது நண்பர்களான சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (35), முருகேசன் (53), துரைசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த ஜெயலட்சுமியிடம் சிகரெட் கேட்டு வாங்கினர். அதற்கான பணத்தை கடையின் உரிமையாளர் கணேசன் கேட்டார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்து அவரிடம் தகராறு செய்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் ரவி தனது நண்பர்களுடன் சேர்ந்து மளிகைகடைகாரர் கணேசன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோரை தாக்கினர். மேலும் மளிகைகடையையும் சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து, தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். என, மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.