அண்ணா பல்கலை கழகத்தின் இந்த அதிரடி முடிவு எனக்கு தெரியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்ணா பல்கலை கழகத்தின் உறுப்பு ( கிளை ) கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்படுவதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானது. எதிர்வரும், கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தத. அதன்படி, 16 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளுக்கு நேற்றைய தினம் மூடுவிழா நடைபெற்றது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அண்ணா பல்கலை கழகம் கூறியிருந்தது.
இச்சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்களிடம் இவ்வாறு கூறினார் : “தமிழக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.