ஜப்பானில் முதல்வர் இருக்கும் போது ரெய்டு நடத்துவதா?: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

ஜப்பானில் முதல்வர் இருக்கும் போது ரெய்டு நடத்துவதா?: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லாத நேரத்தில் ஐ.டி. ரெய்டு நடந்துள்ளது என தி.மு.க. முன்னாள் எம்.பி. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அலறி இருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9-நாள் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறார். அவருடன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு உயர் அதிகாரிகள் சென்று உள்ளனர். அந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் பொருட்டு அவர் மேற்கூறிய நாடுகளுக்கு சென்று இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. முதலீடுகளை ஈர்க்கவா அல்லது பதுக்கவா என எதிரக்கட்சிகள் முதல்வரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளன.

இப்பட்டிப்பட்ட சூழ்நிலையில், மின்சாரம்‌ மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருக்கமானவர்களின் இடங்களில் ஐ.டி. துறையினர் தற்போது அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியிருக்கிறார் ; “முதல்வர் ஸ்டாலின் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பா.ஜ.க. ஐடி ரெய்டை நடத்துகிறது. “கரூர், கோவை உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றியை பெற்று தந்த செந்தில் பாலாஜியை முடக்கவே திட்டமிட்டு ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.” “தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் ரெய்டுக்கு சென்றார்களா? என சந்தேகம்” எழுகிறது என கூறியுள்ளார்.


Share it if you like it