கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக, மாற்றுவதே எனது லட்சியம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அது சுத்த பொய் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00,000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். எனினும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் என மக்களின் வரிப்பணத்தை தொடர்ந்து வீணடித்து வருகிறார்.
இதனிடையே, பிரபல அரசியல் விமர்சகர் அக்னீஸ்வரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார். : உத்தரபிரதேசத்தில் 23 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 8 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என புள்ளி விவரத்துடன் தி.மு.க.வை வெளுத்து வாங்கியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்வதில்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் இடத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.