விமானத்தில் பயணிகளுடன் அமைச்சர் உதயநிதி புகைப்படம் எடுத்துக் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை நோக்கி வந்திருக்கிறது. அப்போது, ஓடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்தினை சந்தித்திருக்கிறது. இந்த கோர விபத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்திருக்க கூடும் என சொல்லப்படுகிறது.
இந்த கோர விபத்தை ஆய்வு செய்வதற்காக, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஓடிசா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். அந்த வகையில், இவர் விமானத்தில் இருப்பதை அறிந்த பயணிகள் சிலர் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கோர விபத்தை ஆய்வு செய்ய செல்லும் அமைச்சருக்கு சக பயணிகளிடம் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இப்போது, உகந்த நேரம் இது அல்ல என்று கூறி தனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். தமிழர்கள் ஒடிசாவில் இறந்திருக்கும் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி போட்டோவிற்கு போஸ் கொடுக்க மனம் வந்தது என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
ரயில் விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள பாரதப் பிரதமர் மோடி ஓடிசா மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். பிரதமரே சென்று இருக்கும் போது தமிழக முதல்வர் ஏன்? அங்கு செல்லவில்லை. மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கையில் விளையாட்டுத்துறை அமைச்சரை ஸ்டாலின் அனுப்பி வைத்தது ஏன்? என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.