பாரதப் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தி.மு.க. நிர்வாகி ராஜீவ் காந்தி ட்விட் செய்து இருப்பதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பாரதப் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு இதோ ;
முதல் ரயில் தடம் புரண்டப்பவே மோடி விளம்பரம் செய்த புதிய வார்னிங் சிஸ்டம் வேலை செஞ்சிருந்தா இவ்ளோ உயிர்சேதம் நடந்திருக்காது. ஒரு விபத்தோடு முடிஞ்சிருக்கும்! மூன்று ரயில் மோதி இருக்காது! ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று கடந்த காலத்தில் லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்! மோடி?
பெண்களின் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு, லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு, கள்ளச்சாராயம், வழிப்பறி, கஞ்சா என தமிழகமே இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு, எல்லாம் வாய் திறக்காமல் இந்த துயர சம்பவத்திலும் அரசியல் செய்யும் ராஜீவ் காந்தியின் செயல் மிக வன்மையாக கண்டிக்கதக்கது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



