அரசு மருத்துவமனை – 3… தனியார் மருத்துவமனையில் -4… ஒரே குழப்பமா இருக்கே?

அரசு மருத்துவமனை – 3… தனியார் மருத்துவமனையில் -4… ஒரே குழப்பமா இருக்கே?

Share it if you like it

செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தனது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், மீது அமலாக்கத்துறை அண்மையில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த வகையில், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் செல்வ குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது : சென்ற வாரம் அரசு மருத்துவமனையில் இருந்த போது 3 அடைப்பு என்று சொல்லப்பட்டது. தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்ட போது அடைப்பு நான்கானது. இன்று செயற்கை சுவாசம் என்னதான் நடக்கிறது என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it