பெண்கள் குறித்து மிக இழிவாக தி.மு.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பேசிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில், விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கழக கண்மணிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல, தி.மு.க.வின் மிக மூத்த ஆபாச பேச்சாளர்களான சைதை சாதிக், தமிழன் பிரசன்னா, சிவாஜி உள்ளிட்டவர்கள் பெண்கள் குறித்து அருவருக்கதக்க வகையில் பேசிய காணொளியும் வைரலாகி வருகிறது. . இந்த கட்சிதான் பெண்களின் கண்ணியத்தை காக்கும் கட்சியா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.