அமைச்சர் உதயநிதியின் மகள் பிறந்த நாளுக்கு சட்டசபையில் தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினை புகழ்வது தொடர்கதையாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலினை புகழ்வதை தங்களது கொள்கையாக கொண்டுள்ளனர். இப்படியாக, விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,
விளையாட்டுதுறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அத்துறையின் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகள் தன்மயாவிற்கு இன்று பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார். இதையடுத்து, தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி தங்களது வாழ்த்துகளை தன்மயாவிற்கு தெரிவித்தனர்.