கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்துள்ளனர் இதுகுறித்து நடிகர் சூர்யா எப்போது பேசுவார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் லாக்கப் மரணங்கள் என தமிழகம் அழிவு பாதையை நோக்கி செல்கிறது. தி.மு.க. ஆட்சியின் அவலத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமே கண்டிக்கின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் ஒரு சிறு தவறு நடந்தால் கூட திராவிட நடிகர்கள், போலி போராளிகள், சில்லறை ஊடகங்கள், கைக்கூலி நெறியாளர்கள் என ஒட்டு மொத்த நபர்களும் அலறியதை நாம் பார்த்தோம்.
இப்படிப்பட்ட சூழலில், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி கிட்டதட்ட 19-பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதனை, ஒரு விவாதப்பொருளாக மாற்றி மக்களிடம் விழிப்புணர்வினை கொண்டு வர ஊடகங்கள் வழக்கம் போல கள்ள மெளனமாக இருந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அலறிய நடிகர் சூர்யா இப்போது எங்கே? பதுங்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.