தி.மு.க. எம்.பி. கனிமொழி ஜாலியாக பேட்டியளித்த காணொளி ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கனிமொழி. இவர், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் சிறு தவறு நடந்தால் பொங்கி எழுந்து விடுவார். அதே சம்பவம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்தால் வாய்மூடி மெளனியாக இருப்பார். இப்படியாக, இவரது அரசியல் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. ஸ்டாலின் ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா என தமிழகம் அழிவுபாதையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுதவிர, சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழல் நிலையில், கள்ளச்சாரயம் அருந்தி கிட்டதட்ட 22 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில், விழுப்புரம், செங்கபட்டு மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவேண்டிய இடத்தில் இருப்பவர் தி.மு.க. எம்.பி. கனிமொழி. இதனையெல்லாம், மறந்து விட்டு பிரபல ஊடகமான நியூஸ்-7-க்கு சாப்பிட்டு கொண்டே ஜாலியாக பேட்டி கொடுத்த சம்பவம்தான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.