புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி அமைச்சர் செந்தில் பாலாஜியை பத்திரிகையாளர்கள் முன்பு வெளுத்து வாங்கியிருக்கிறார்.
மது பிரியர்களின் சொர்க்க புரியாக பாண்டிச்சேரி இருந்து வருகிறது. இன்று, அதனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தமிழகம் மாறியுள்ளது. இளம் பெண்கள், குடும்ப பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளி, மாணவ – மாணவிகள் கூட இன்று மதுவிற்கு அடிமையாகியுள்ளனர். குடிக்கார்களின் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.