தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி விட்டு தனது சகோதரியை முன்னாடி வரும்படி அழைத்த ராகுல் காந்தியின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில், கடந்த மே -10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், அதன் முடிவுகள் மே-13 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த சித்தராமையா முதல்வராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனிடையே, இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாஹெல், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் டி. ராஜா, நடிகர் கமல்ஹாசன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தனது அருகில் நின்று கொண்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி விட்டு தனது அன்பு சகோதரியை ராகுல் காந்தி முன்னிருத்திய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
எங்கள் தானை தலைவரை கூப்பிட்டு வச்சா கும்மி அடிக்கிறீங்க. தமிழ்நாட்டில் சீட்டு கேட்டு வா அப்போது பார்த்துகொள்கிறோம் என உடன்பிறப்புகள் சமூகவலைத்தளங்களில் உருண்டு வருகின்றனர்.