டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அறிக்கை ஒன்றினை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தயாரித்துள்ளார். அதனை, முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இவ்வாறு கூறினார் : மது இல்லாத இந்தியா என்பது சாத்தியமே இல்லை, ஏனென்றால் இது ஜனநாயக நாடு ஆகவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஐந்தாயிரத்திற்கும் அதிகமான உள்ள டாஸ்மாக் கடைகளை ஆயிரத்திற்கும் கீழாக கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2020 ல் மதுபானத்திற்கு அடிமையானவன் எண்ணிக்கை 5% ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனுடைய பாதிப்பு சமூக பாதிப்பாக மாறிவிடும். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் மதுபான கடையின் மூலம் வருமானம் என்பது 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும்,
அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளோம். 44000 கோடி அரசுக்கு நஷ்டம் இல்லாமல் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் நிச்சயம் இடம் பெறும் என தெரிவித்தார். மது போதைக்கு தமிழகத்தில் 9% மக்கள் அடிமையாகியிருப்பதாக கூறினார். மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி வெள்ளை அறிக்கையை கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.