Share it if you like it
முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் கொண்டாடி வருவதாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்து இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சியாக இந்த அரசு இல்லை என்பதே ஒட்டு மொத்த தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் சரவணன் பிரபல ஊடகமான புதிய தலைமுறைக்கு பேட்டியளித்து இருக்கிறார். அந்த பேட்டியில், இப்படி ஒரு முதல்வர் ( ஸ்டாலின் ) கிடைக்க தமிழக மக்கள் என்ன தவம் செய்தோமா? என யோசித்து கொண்டு இருக்கிறார்கள் என பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

Share it if you like it