செங்கோலில் இஸ்லாம், கிறிஸ்தவ குறியீடுகள் ஏன் இல்லை?: மத்திய அமைச்சர் தந்த விளக்கம்!

செங்கோலில் இஸ்லாம், கிறிஸ்தவ குறியீடுகள் ஏன் இல்லை?: மத்திய அமைச்சர் தந்த விளக்கம்!

Share it if you like it

செங்கோல் தொடர்பாக பத்திரிக்கை நிருபர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் மே- 28 ( ஞாயிற்று கிழமை) திறக்கப்பட உள்ளது. இதனை, பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அந்த வகையில், புதிய நாடாளுமன்றத்தில் சோழர்களின் பெருமையை பறைச்சாற்றிய செங்கோல் நிறுவப்பட உள்ளது. வழக்கம் போல, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாரதப் பிரதமர் மோடியின் மீது வீண் பழியை சுமத்தி விட்டு அவ்விழாவினை புறக்கணிக்கும் முடிவிற்கு வந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர்களான நிர்மலா சீதாராமன், எல்.முருகன், புதுவை- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, பத்திரிகை நிருபர் ஒருவர் இஸ்லாம், கிறிஸ்தவ குறியீடுகள் செங்கோலில் ஏன் இல்லை? என கேள்வி எழுப்பினார். இதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it