36,000 வீடுகளுக்கு வெறும் 3,900 தானா? அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்!

36,000 வீடுகளுக்கு வெறும் 3,900 தானா? அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்!

Share it if you like it

மத்திய அரசு கொடுத்த நிதி முறையாக பயன்படுத்தபடவில்லை என்று தமிழக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர் கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்பு மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகிறார். மத்திய அரசின் மீது தமிழக மக்களுக்கு கோவம் ஏற்படும் வண்ணம் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவது. ஒன்றிய அரசு என்று தொடர்ந்து அழைப்பது என தி.மு.க. தனது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் நாராயணசாமி அண்மையில் வேலூர் மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அந்த வகையில், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில் அமைச்சர் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர் பேசும் போது, ஜல் ஜீவன் திட்டம், சுவட்ச் பாரத் திட்டம் மற்றும் மத்திய அரசு ஒதுக்கிய நிதிக்கு உரிய கணக்கு எங்கே? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து இருக்கிறார். இதற்கு, உரிய பதில் அளிக்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறி இருக்கின்றனர். 36,000 வீடுகள் கட்டுவதற்கான நிதியினை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், தி.மு.க. அரசு வெறும் 3,900 வீடுகளை மட்டுமே கட்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். இதுகுறித்தான, கூடுதல் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it