அன்று விமர்சனம்… இன்று தி.மு.க.விற்கு வாழ்த்து!

அன்று விமர்சனம்… இன்று தி.மு.க.விற்கு வாழ்த்து!

Share it if you like it

உதயநிதி அமைச்சராக பதவியேற்றதற்கு கரு.பழனியப்பன் வாழ்த்து தெரிவித்துள்ளதற்கு நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்க – திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கடந்த டிச., 14 – ஆம் தேதி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான கரு. பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

Stalin is dangerous than Karunanidhi என்று கதறியவாளுக்குத் தெரியும், Udhayanidhi is more dangerous than Stalin என்று உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஒரு கட்சியில் சேர்ந்து எம்.பி., மாவட்ட செயலாளர், அமைச்சர் கூட ஆக முடியும். ஆனால், அ.தி.மு.க.வில் மட்டுமே முதல்வர் ஆக முடியும். தி.மு.க.வில் இது எல்லாம் சாத்தியமல்ல என்று தி.மு.க.வை கரு. பழனியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாடி இருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Image

Share it if you like it