கோவிலில் நீதிபதிக்கே இந்த கதியா?

கோவிலில் நீதிபதிக்கே இந்த கதியா?

Share it if you like it

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியையே அறநிலையத்துறை ஊழியர்கள் ஏமாற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. விடியல் ஆட்சியில் பொதுமக்களையும் தாண்டி உயர் பொறுப்பில் உள்ளவர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கீழ்கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் எஸ்.எம்.சுப்ரமணியம். இவர், தனது குடும்பத்துடன் வடபழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, மூன்று ரூ. 150 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியுள்ளார். அதில், இரண்டு ரூ.50 டிக்கெட்களும், ஒரு ரூ. 5 டிக்கெட்டும் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கோவில் ஊழியர்களுக்கும் நீதிபதிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டன.

இதையடுத்து, கோவில் செயல் அதிகாரி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன டிக்‍கெட்டில் முறைகேடு நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கோயில் ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it