தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு z பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, வருகைக்கு பின்பு அவரது கட்சியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவரது, அசுர வளர்ச்சி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, தி.மு.க.வின் அடிமை ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சீப்பு போன்ற நெறியாளர்கள் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பேசியும், எழுதியும் வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கோவை குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை என விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் பிரிவினைவாதிகளால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு z பிரிவு பாதுகாப்பினை வழங்கியிருக்கிறார். இதன்மூலம், தமிழகத்தில் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு உள்ளது என்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.